Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

எங்கள் ஊரில் பேருந்து நிற்க வேண்டும்…. போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்…. அதிகாரிகள் பேச்சுவார்த்தை….!!!!

பேருந்தை  சிறைப்பிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம்  பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஊசாம்பாடி கிராமத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு 225 என்ற எண் கொண்ட அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. ஆனால் கடந்த சில நாட்களாக பேருந்து இந்த கிராமத்தில் நிற்பதில்லை. இதுகுறித்து பொதுமக்கள் பலமுறை மண்டல போக்குவரத்து அலுவலகத்திலும், ஆட்சியர் அலுவலகத்திலும் மனு அளித்துள்ளனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் நேற்று ஊசாம்பாடி கிராமத்தை சேர்ந்த சில இளைஞர்கள் இந்த பேருந்தில் ஏறியுள்ளனர். ஆனால் கண்டக்டர் அங்கு பேருந்து நிற்காது என கூறியுள்ளார்.

இதனையடுத்து அந்த வாலிபர்கள் தங்களது  கிராமத்தின் அருகே பேருந்து வரும்போது ஊர் பொதுமக்களுடன் சேர்ந்து பேருந்தை  சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த போக்குவரத்து துறை அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அந்த பேச்சுவார்த்தையில் 5  நாட்களுக்குள் ஊசாம்பாடி பேருந்து நிலையத்தில் அரசு பேருந்துகள் நிற்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்த பிறகு கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலந்து சென்றுள்ளனர். இதனால் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |