Categories
தேசிய செய்திகள்

“எங்கள் ஊழியர்கள் தகுதியின் அடிப்படையில் பணியமர்த்தப்படுகின்றனர்”…. பிரபல ஷாப்பிங் மால் விளக்கம்….!!!!!!!!

பிரபல ஷாப்பிங் வளாகமான   லூலு மால் ஜூலை 10ஆம் தேதி அன்று லக்னோவில் திறக்கப்பட்டுள்ளது. முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் திறந்து வைத்துள்ளார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கோடீஸ்வரர் யூசுப் அலி தலைமையிலான அபுதாபியை தளமாக கொண்ட லுலு குழுமத்திற்கு இந்த மால் சொந்தமானதாகும். இந்த நிலையில் லக்னோவில் சமீபத்தில் திறக்கப்பட்ட  லுலு மாலில் ஒரு குழுவினர் திடீரெனப் புகுந்து தொழுகை நடத்துவதை காட்டும் வீடியோ வெளியாகி உள்ளது. இதனை அடுத்து முஸ்லிம் சார்புடைய நிறுவனமாக பாகுபாடு காட்டி அந்த நிறுவனம் செயல்படுகின்றது என குற்றச்சாட்டுகள் பரவலாக எழுந்து வருகின்றது.

இதனை அந்த நிறுவனம் மறுத்து இருக்கின்றது. எங்கள் ஊழியர்கள் திறமை மற்றும் தகுதியின் அடிப்படையில் பணியமடுத்தப்படுகின்றார்கள். மேலும் சாதி வகுப்பு அல்லது மதத்தின் அடிப்படையில் அல்ல என கூறியிருக்கின்றது. லுலு  குரூப் இன்டர்நேஷனல் தலைமையகம் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அபுதாபியில் இருக்கிறது. மால் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, லுலு  மால் நிர்வாகம் எந்தவித பாகுபாடும் இல்லாமல் வணிகத்தை நடத்தும் முற்றிலும் தொழில் முறை நிறுவனமாகும். மேலும் அதன் ஊழியர்களின் 80 சதவீதம் பேர் இந்துக்களாவர். சில சுயநல சக்திகள் எங்கள் நிறுவனத்தை குறி வைக்க முயற்சி செய்வது வருத்தம் அளிக்கிறது.

ஊழியர்களில் 80 சதவீதம் இந்துக்கள் இருக்கின்றனர். மீதமுள்ளவர்கள் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் பல்வேறு சமூகங்களை சேர்ந்தவர்கள் என தெரிவித்துள்ளது. அனுமதி இல்லாமல் தொழுகையை ஏற்பாடு செய்ய முயன்றவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க மால் நிர்வாகம் தரப்பில்  புகார் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு இடையே மால் வளாகத்தில்  சிலர் புகுந்து தொழுகை நடத்தியதை கண்டித்து எதிர்வினை ஆற்றும் விதமாக கடந்த சனிக்கிழமை அன்று லுலு மாலில் நுழைந்து அனுமான் சாலிசா பாடலை பாடத் தொடங்கிய இருவர் சமீபத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை கூறியுள்ளது.

Categories

Tech |