Categories
அரசியல் மாநில செய்திகள்

எங்கள் ஓட்டு அதிமுகவுக்கு இல்லை….! ஓங்கி எழுந்த எதிர்ப்பு குரல்…. அதிர்ச்சியில் ஈபிஎஸ், ஓபிஎஸ் …!!

எங்கள் ஓட்டு அதிமுகவுக்கு என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் டிரெண்ட் ஆகி வருகிறது. இது அதிமுகவுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ளது. மார்ச் 12ம் தேதியுடன் விருப்ப மனு தாக்கல் முடிவடைகிறது. இந்த தேர்தலில் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நோக்கத்துடன் அதிமுக, திமுக போன்ற பல கட்சிகள் போட்டி போட்டு வருகின்றனர். பல புதிய கட்சிகள் இந்த முறை தேர்தலில் களம் காண்கிறது. தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது.

எந்தெந்த கட்சிகள் என எந்த கட்சியுடன் கூட்டணியில் உள்ளது என்ற பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. முன்னதாக பாமக கட்சி அதிமுகவுடன் இணைந்து உள்ளது. இதில் பாமகவுக்கு 23 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து தேமுதிக கட்சியினரும் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

இப்படி கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் பரபரப்பாக நடந்து கொண்டு வரும் நிலையில் எங்கள் ஓட்டு அதிமுகவுக்கு இல்லை என்ற ஹேர்ஸ்டேக் தேசிய அளவில் டிரெண்ட் ஆகி வருவது. இந்த ஹேர்ஸ்டேக் அதிமுகவிற்கும், எடப்பாடி பழனிச்சாமி பெரிய பின்னடைவாக அமைந்துள்ளது. இதனால் அதிமுக நிர்வாகிகள் பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

Categories

Tech |