மருத்துவத்துறை பணியாளர்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணி செய்கின்றனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள், இ.எஸ்.ஐ. மருத்துவமனை உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளில் பணியாற்றி வரும் மருத்துவத்துறையினர் மருத்துவமனைகளில் உள்ள காலியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், தொகுப்பூதியம், மதிப்பூதியம் புறா ஆதார நிலைய ஊழியர்களை காலமுறை ஊதியத்தில் பணியமர்த்த வேண்டும் உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோரிக்கை அட்டை இன்று அணிந்தனர்.
இதனையடுத்து நாளை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி மருத்துவக் கல்லூரி முதல்வர் மற்றும் நலப்பணி இணை இயக்குனர்கள் மனு அளிக்கின்றனர். இதற்கான ஏற்பாடுகளை மருத்துவ துறை நிர்வாக ஊழியர் சங்க மாநில தலைவர் விவேகானந்தன், கூட்டமைப்பு தலைவர் ராம்குமார், செயலாளர் அந்தோணி ஜெயராஜ், பொருளாளர் அழகர்சாமி உள்ளிட்டோர் செய்கின்றனர்.