Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

எங்கள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்…. போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு உழவர் சங்கத்தினர்…..!!!!

ஆலையை  முற்றுகையிட்டு தமிழ்நாடு உழவர் பேரியக்கத்தினர்  போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒரு   பகுதியில் கூட்டுறவு சர்க்கரை ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையின்  முன்பு  தமிழ்நாடு உழவர் பேரியக்கத்தினர் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது பா.ம.க. மாவட்ட செயலாளர் கணேஷ் குமார், மாநில செயலாளர் வேலுச்சாமி ஆகியோர் தலைமையில்  போராட்டம் நடைபெற்றது.

இந்நிலையில் கூட்டுறவு சர்க்கரை ஆலை வழங்க வேண்டிய 32 கோடி நிலுவை தொகையை உடனடியாக வழங்க வேண்டும், கரும்பு 1  டன்னுக்கு 5 ஆயிரம்  ரூபாய் என நிர்ணயம் செய்ய வேண்டும், கரும்பு வெட்டு கூலியை ஆலை நிர்வாகமே ஏற்றுக்கொள்ள வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.‌ இதில் சங்கத்தின் நிர்வாகிகள், விவசாயிகள்,  பெண்கள் என பலர் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பியுள்ளனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |