Categories
உலக செய்திகள்

எங்கள் தடுப்பூசி பலனளிக்கவில்லை…. ஐயோ தப்பா சொல்லிட்டேன்…. பல்டி அடித்த சீனா….!!

சீனாவில் தயாரிக்கப்படும் கொரோனா தடுப்பூசிகள் பெரிய அளவில் பலனளிக்கவில்லை என நோய் கட்டுப்பாட்டு அதிகாரி ஒப்புக்கொண்டு பின்னர் மாற்று கருத்து தெரிவித்துள்ளார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று  உலக நாடு முழுவதிலும் பரவி  ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. சீனாவிலும் தொடர்ந்து ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் தலைவர் GaoFu சீனாவில் தயாரிக்கப்படும் தடுப்பூசிகள் பெரிய அளவில் பலனளிக்கவில்லை எனக் கூறினார்.

இதனைத் தொடர்ந்து தடுப்பூசிகளின் செயல்திறனை அதிகரிக்க சீன மருத்துவ குழுக்கள் ஆலோசனை நடத்தி வருகிறது என்றும் தடுப்பூசியின் செயல்முறையை அதிகரிக்க டோஸ்கள் மற்றும் இடைவெளி நாட்கள் அதிகரிப்பது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார். பின்னர் GaoFu தன் கருத்தில் இருந்து பின்வாங்கி உலகத்தில் தயாரிக்கப்படும் அனைத்து தடுப்பூசிகளின் செயல்திறனும் குறைவாக இருக்கிறது  என்றும் அவற்றின் செயல் திறனை அதிகரிக்க உலகெங்கும் உள்ள விஞ்ஞானிகள் பரிசீலனை செய்ய வேண்டும் எனவும் கூறினார். GaoFu  நான் சீன தடுப்பூசிகள் குறைந்த அளவு பயனளிப்பதாக கூறியது தவறான கருத்து என தெரிவித்துள்ளார்.

Categories

Tech |