Categories
மாநில செய்திகள்

எங்கள் தலைவர்…. எங்கள் இஷ்டம்…. உங்களுக்கு சம்பந்தம் இல்லை… பிரசாந்த் கிஷோருக்கு பதிலடி கொடுத்த காங்கிரஸ் எம்.பி…!!

கடந்த 2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்ததால் அந்த கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தன் பதவியை ராஜினாமா செய்தார். அதன்பிறகு தற்காலிக தலைவராக சோனியா காந்தி பொறுப்பேற்றார். இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் பதவி என்பது யாருக்கும் சொந்தமானது இல்லை என்று தேர்தல் உத்தியாளரான பிரசாந்த் கிஷோர் தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “பலமான எதிர்க்கட்சிக் கூட்டணிக்கு காங்கிரஸின் பிரதிநிதித்துவம் அவசியமானது. ஆனால் காங்கிரஸ் தலைமைப் பதவியாருக்கு சொந்தமானது இல்லை. கடந்த 10 ஆண்டுகளில் 90% தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்துள்ளது. எதிர்க்கட்சிகளின் கூட்டணி தலைமை என்பது ஜனநாயகப்பூர்வமாக தேர்வு செய்யப்பட வேண்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார். இவருடைய கருத்து காங்கிரஸ் வட்டாரத்தில் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இது குறித்து காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி தனது டுவிட்டர் பக்கத்தில் பிரசாந்த் கிஷோருக்கு பதிலடி கொடுத்து பதிவிட்டுள்ளார்.

அதில், “எங்கள் தலைவரைத் காங்கிரஸ் தொண்டர்களை தேர்வு செய்வோம். எங்கள் கட்சிக்காகாவும் இந்த நாட்டுக்காகவும் தியாகம் செய்தவர்கள் யார் என்று எங்களுக்கு தெரியும். நீங்கள் பாஜக கட்சியுடன் இணைந்து காங்கிரசை வீழ்த்துவதற்காக வேலை பார்த்து வருபவர். அதனால் உங்களுக்கு காங்கிரஸ் கட்சியும் அதன் தலைமையும் பற்றி பேசுவதற்கு என்ன உரிமை உள்ளது? இது உங்களுக்கு சம்பந்தமில்லாத விஷயம் என்று அவர் தனது கோபத்தை தெரிவித்துள்ளார்.

Categories

Tech |