Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

எங்கள் நகையை திரும்ப கொடுங்க…. மேலாளரின் செயல்…. விவசாயிகள் போராட்டம்….!!

நகையை திருப்பி  தராத கூட்டுறவு சங்கம் மேலாளரை கண்டித்து விவசாயிகள்  போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சின்ன கண்ணூர் கிராமத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் ஒன்று அமைந்துள்ளது. இந்த சங்கத்தில் கிராமத்தில் வசிக்கும் அனைத்து விவசாயிகளும் தங்களது நகைகளை அடகு வைத்துள்ளனர். இந்நிலையில் நேற்று கூட்டுறவு சங்கத்தில் அடகு வைத்த 8 விவசாயிகள் தங்களது நகைகளை திருப்புவதற்காக வந்துள்ளனர். இதனையடுத்து  விவசாயிகள் 8 லட்சத்து 73 ஆயிரம் ரூபாய் பணத்தை கட்டிவிட்டு தங்களது  நகைகளை  கேட்டுள்ளனர் . ஆனால்  கூட்டுறவு  சங்கத்தின் உதவி மேலாளர்  கோவிந்தராஜ் என்பவர்  உணவு இடைவேளைக்கு பிறகு நகைகளை தருவதாக கூறிவிட்டு லாக்கரின் சாவியை எடுத்து கொண்டு வெளியே சென்றுவிட்டார்.

இதனால் விவசாயிகள் மாலை 5.30 மணி வரை காத்திருந்தும் கோவிந்தராஜன் வரவில்லை. இதனால்  ஆத்திரமடைந்த விவசாயிகள், தி.மு.க. ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை, ஊராட்சி மன்ற தலைவர்  சாமி மற்றும் கிராமக்கள் ஆகியோருடன் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த கூட்டுறவு சங்க உயர் அதிகாரிகள் கோவிந்தராஜ் அழைத்து வந்து நகைகளை திருப்பி விவசாயிகளிடம் ஒப்படைத்துள்ளனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |