Categories
உலக செய்திகள்

எங்கள் நாட்டு மக்களின் கொலைகளுக்கு…. ரஷ்யாவை தண்டிக்க வேண்டும்…. கொந்தளிப்புடன் பேசிய பிரபல நாட்டு ஜனாதிபதி….!!

உக்ரைனில் நடந்த போருக்கு ரஷ்யாவை தண்டிக்க வேண்டும் என அந்நாட்டு ஜனாதிபதி ஜெலன்ஸ்கி கோரியுள்ளார்.

உக்ரைனில் நடந்து வரும் போருக்கு இடையில் ரஷ்யாவின் பகுதி அணிதிரட்டல் தொடர்பான ஆணையில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின் கையெழுத்திட்டதாக அறிவித்துள்ளார். இந்நிலையில் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்த ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில், உக்ரேனிய ஜனாதிபதி  ஜெலன்ஸ்கியின் பதிவு செய்யப்பட்ட வீடியோ உரை நேற்று முன்தினம் வெளியிடப்பட்டுள்ளது.

இது குறித்து உக்ரேனிய ஜனாதிபதி  ஜெலன்ஸ்கி கூறியதாவது, “உக்ரைனுக்கு எதிராக ஒரு குற்றம் நடந்துள்ளது, நாங்கள் நியாயமான தண்டனையை கோருகின்றோம். எங்கள் பிரதேசத்தை திருட முயற்சித்ததற்காக, ஆயிரக்கணக்கான மக்களின் கொலைகளுக்கு, பெண்கள் மற்றும் ஆண்களை சித்திரவதைகள், அவமானங்களுக்கு தண்டனையை கோருகின்றோம். எங்கள் அரசுக்கு எதிரான ஆக்கிரமிப்பு குற்றத்திற்காக ரஷ்யாவை தண்டிக்க ஒரு சிறப்பு நீதிமன்றம் உருவாக்கப்பட வேண்டும். இந்த போருக்கு ரஷ்யா தனது சொத்துக்களுடன் பணம் செலுத்த  வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |