தாசில்தாரை தகாத வார்த்தையால் பேசிய அண்ணன் தம்பி மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஏரூர்ந்தவாடி கிராமத்தில் சரவணகுமார் -ரேவதி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சொந்தமான நிலத்தை அதே பகுதியை சேர்ந்த தனபால் என்பவர் ஆக்கிரமிப்பு செய்துள்ளார். இந்நிலையில் ரேவதி தங்களது நிலத்தை அளந்து தர வேண்டும் என தாசில்தார் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார். அதன் பேரில் தாசில்தார் குருநாதன், மண்டல துணை தாசில்தார் சரவணகுமார், வருவாய் ஆய்வாளர் ரவி, கிராம நிர்வாக அலுவலர் ஐயப்பன் உள்ளிட்ட பல அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நிலத்தை அளந்து ஆக்கிரமிப்புகளை அகற்ற முயன்றனர்.
இதனை பார்த்த தனபாலின் மகன்களான அரவிந்த், ஆகாஷ் ஆகிய 2 பேர் தாசில்தார் குருநாதனை பணி செய்யவிடாமல் தகாத வார்த்தையால் பேசியுள்ளனர். இதுகுறித்து தாசில்தார் குருநாதன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அரவிந்த், ஆகாஷ் ஆகிய 2 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.