Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

எங்கள் பணத்தை திரும்ப கொடுக்க வேண்டும்…. குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்ற வியாபாரி…. மயிலாடுதுறையில் பரபரப்பு….!!!!

வாடகை பாத்திரக்கடை வியாபாரி தனது குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள திருக்கடையூர் பகுதியில் காமராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வாடகை பாத்திரக்கடை ஒன்றை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் காமராஜ் தனது குடும்பத்துடன் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி அலுவலகத்தின் முன்பு  உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காமராஜ் மற்றும் அவரது குடும்பத்தினரை தடுத்து நிறுத்தி விசாரணை செய்தனர்.

அந்த விசாரணையில்  காமராஜனின்  மகனுக்கு அரசு வேலை வாங்கி தருவதாக கூட்டுறவு வங்கி ஊழியர் ஒருவர் கடந்த 2019-ஆம் ஆண்டு 16 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பெற்றுக் கொண்டதும், அந்தப் பணத்தை காமராஜ் திரும்ப கேட்டும்  தராததால் ஆத்திரமடைந்த அவர் தனது குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்றது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |