மருத்துவர்களின் கணிப்பை பொய்யாக்கி ஒரு வாலிபர் தனது 18-வது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார்.
அமெரிக்காவில் உள்ள மிசவுரி பகுதியில் டிரெஸ் ஜான்சன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பிறக்கும்போதே இரண்டு முகங்களுடன் பிறந்துள்ளார். இதனை மருத்துவர்கள் கிரானியோபேஷியல் டூப்ளிகேஷன் என்று கூறுகின்றனர். இவர் தற்போது தனது 18-வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். இந்த நோயால் இதுவரை உலகம் முழுவதும் 36 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இவருக்கு ஒரு நாளைக்கு 400 முறை வலிப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் மருத்துவர்களின் தொடர் சிகிச்சையால் தற்போது 40 முறையாக குறைந்துள்ளது. இது குறித்து டிரெஸ் ஜான்சனின் தாயார் கூறியதாவது. எங்கள் மகன் டிரெஸ் ஜான்சன் பிறந்த போது மருத்துவர்கள் இந்த குழந்தை நீண்ட நாள் உயிரோடு இருக்க போவதில்லை. எனவே இந்த குழந்தையை விட்டுவிட்டு கடந்து செல்லுங்கள் என்று கூறினர். ஆனால் எனது கணவர் அவர்களுடன் சண்டை போட்டு குழந்தைக்கு சிகிச்சை அளித்து மீட்டு கொண்டு வந்தார்.
இந்நிலையில் எங்கள் மகனை ஆராய்ச்சி செய்வதற்கான ஒரு உயிராக பார்க்காமல் சராசரி நோயாளிகளாக கருதி சிகிச்சை அளிக்கும் மருத்துவ நிபுணர்களிடம் இருந்து எங்கள் மகனுக்கு தொடர்ந்து உதவி கிடைக்கும் என்று நம்புகிறோம். இதனையடுத்து அவன் பார்ப்பதற்கு எப்படி இருக்கிறான் என்பது பற்றி எங்களுக்கு கவலை இல்லை. அவன் உயிரோடு இருக்கிறான் என்பது எங்களுக்கு போதும். இதனையடுத்து ஒரு மருத்துவர் அவனின் தலையில் அறுவகை சிகிச்சை செய்து அவனது உருவத்தை மாற்றினார். தற்போது ஒரு குழந்தை மனதிறன் கொண்ட டிரெஸ் ஜான்சன் தனது வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் வேகமாக முன்னேறி வருகிறான். மேலும் இதில் இருந்து அவன் முழுமையாக மீண்டு வருவான் என நாங்கள் நம்புகிறோம் என அவர் கூறியுள்ளார்.