Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

எங்கள் மத உரிமையை பறித்தது ஏன்?… தவ்ஹீத் ஜமாத் சார்பில் நடைபெற்ற போராட்டம்…. விருதுநகரில் பரபரப்பு….!!

பொன்விழா மைதானம் முன்பு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பு   போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பொன்விழா மைதானம் முன்பு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பு  சார்பில் போராட்டம் நடைபெற்றுள்ளது. இந்தப் போராட்டமானது மாநில பொதுச் செயலாளர் அப்துல் கரீம் தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் மாணவிகள் ஹிஜாப் அணியும்  மத உரிமையை தடைசெய்ததை  கண்டித்து இந்தப் போராட்டமானது நடைபெற்றுள்ளது.

இதில்  தலைவர்கள், பெண்கள், தொண்டர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பியுள்ளனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Categories

Tech |