Categories
உலக செய்திகள்

“எங்கள் மீது இஸ்லாமிய பயங்கரவாதம் போர் அறிவித்திருக்கிறது..!” பிரான்ஸ் பிரதமர் உரையால் பரபரப்பு..!!

பிரான்சில் கொலையான நிர்வாக காவல்துறை பெண் ஊழியரின் அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் பங்கேற்ற பிரதமர் இஸ்லாமிய பயங்கரவாதம் எங்கள் மீது போர் அறிவித்ததாக  தெரிவித்துள்ளார்.  

பிரான்சில் நிர்வாக காவல்துறை ஊழியரான Stephanie Monferme என்ற பெண்ணை, துனிசியா நாட்டை சார்ந்த 49 வயதுடைய நபர், கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். இதனால் காவல்துறையினர் அந்த நபரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளனர். மேலும் மறைந்த Stephanie Monferme க்கு 3 குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் அவருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றுள்ளது. இதில் பிரதமர் Jean Castex பங்கேற்றுள்ளார். அதில் அவர் பேசியதாவது, இஸ்லாமிய பயங்கரவாதத்தினால் தான் இவர் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளார். மேலும் அவர் பிரான்ஸ் நாட்டிற்கு பணியாற்றியதால் தான் கொலை செய்யப்பட்டதாகவும் கூறியுள்ளார்.

நம் மீது போர் அறிவித்திருக்கிறது, இஸ்லாமிய பயங்கரவாதம். எனினும் அவர்கள் கோழைகள். அதனால் தான் பெண் மீது தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள் என்று கூறியுள்ளார். அதன் பிறகு மறைந்த Stephanie Monferme பிரான்ஸ் நாட்டின் மிக உயரிய பதக்கமான the Chevalier de La Legion d’Honneur  அளிக்கப்பட்டது.

Categories

Tech |