தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சண்முகராஜா கலையரங்கம் முன்பு அ.தி.மு.க.வினர் மீது வழக்கு போடும் தி.மு .க .வினரை கண்டித்து அ.தி.மு.க.வினர் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டமானது மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் தலைமையில் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் பாஸ்கரன், நகர செயலாளர் என். எம். ராஜா, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி துணைச் செயலாளர் கருணாகரன், மாநில மாணவரணி துணைச் செயலாளர் ஆசைத்தம்பி, முன்னாள் எம்.எல்.ஏ. நாகராஜன், குணசேகரன், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் புவனேந்திரன், மாவட்ட வக்கீல் பிரிவு இணை செயலாளர் ராமநாதன், சுந்தரபாண்டியன், மாவட்ட இளைஞரணி செயலாளர் வக்கீல் ராஜா, மாவட்ட கவுன்சிலர் ராமசாமி, அ.தி.மு.க மாவட்ட பொருளாளர் ரத்தினம் , மாவட்ட மகளிரணி நிர்வாகி வெண்ணிலா, சசிகுமார், கயல்விழி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பியுள்ளனர். அதன்பின்னர் போட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு கே.வி. சேகர் நன்றி கூறியுள்ளார்.