Categories
தேசிய செய்திகள்

“எங்கள் வீட்டுப் பெண்கள் விற்பனைக்கு அல்ல”… வீடுகளில் எழுதி ஒட்டி உள்ள பெண்கள்… பினராய் விஜயன் வேதனை…!!!!

கேரளாவில் இந்த ஒரு வாரத்தில் மட்டும் அடுத்தடுத்து மூன்று இளம் பெண்கள் வரதட்சணை கொடுமை காரணமாக உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா மாநிலம் கொல்லத்தை சேர்ந்த 22 வயதான ஆயுர்வேத மருத்துவம் மற்றும் இளங்கலை சிகிச்சை படித்த மாணவி விஸ்வமாயா என்பவர் தனது கணவர் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். வரதட்சணை கொடுமை காரணமாக அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனவும், அது தொடர்பாகப் பல விவாதங்களும் விமர்சனங்களும் தொடர்ந்து பேசப்பட்டு வந்தது. மேலும் அவரது கணவர் தான் வரதட்சணை கொடுமை செய்ததாகவும், அதனால் அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் விஸ்வமாயா குடும்பத்தினர் குற்றம் சாட்டி இருந்தனர்.

இதைத்தொடர்ந்து திருவனந்தபுரத்திலுள்ள அர்ச்சனா என்ற 24 வயது பெண் மர்மமான முறையில் இறந்தார். அவரது தற்கொலைக்கு சுரேஷ் தான் காரணம் என்று அர்ச்சனாவின் குடும்பத்தினர் குற்றம் சாட்டினர். அதுமட்டுமில்லாமல் அர்ச்சனாவும் சுரேசும் காதல் திருமணம் செய்து கொண்டதாகவும், திருமணத்திற்கு சில மாதங்களுக்கு பிறகு சுரேஷ் தனது மகளிடம் 3 லட்சம் பணம் கேட்டு டார்ச்சர் செய்ததாகவும் அவரது தந்தை தெரிவித்துள்ளார். இதையடுத்து ஜூன் 21-ஆம் தேதி அர்ச்சனா இறந்துவிட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. அர்ச்சனாவின் பெற்றோர்கள் எனது மகள் தற்கொலை செய்து கொண்டிருக்க மாட்டார். அவரது கணவர் சுரேஷ் தான் அவரை கொலை செய்துள்ளார் என்று குற்றம் சாட்டியுள்ளனர்.

அதை தொடர்ந்து ஆலப்புழாவில் உள்ள வல்லிகுன்னத்தில் கணவர் வீட்டில் கடந்த செவ்வாய்க்கிழமை சுசித்ரா என்ற இளம் பெண் இறந்து கிடந்தார். இவரது கணவர் விஷ்ணு ராணுவ வீரர். இவர்களுக்கு கடந்த மார்ச் 21ஆம் தேதி திருமணம் நடந்து முடிந்தது. திருமணமான ஒரு மாதத்திற்கு பிறகு விஷ்ணு உத்ரகாண்ட் சென்றுள்ளார். இந்நிலையில் அவர் உயிரிழந்தது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இப்படி கேரளாவில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் மூன்று இளம் பெண்கள் வரதட்சணை கொடுமை காரணமாக அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றது.

அடுத்தடுத்து இளம்பெண்கள், தங்களது கணவரின் வீட்டில் உயிரிழந்த சம்பவங்களைத் தொடர்ந்து, வரதட்சணைத் தொடர்பான புகாரளிக்க, 24மணி நேர ஹெல்ப்லைன் எண்ணை, முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்தார். அறிவித்த சில மணி நேரங்களிலேயே நூற்றுக்கணக்கான புகார்கள் குவிந்து வருகின்றன.

பெண்கள் உயிரிழந்தது தொடர்பாக வேதனை தெரிவித்துள்ள பினராயி விஜயன், மனைவியை அடிப்பது ஆண்மை என்றும், மன்னிப்பதும், சகித்துக்கொள்வதும் பெண்மையின் அடையாளம் என்றும் நினைக்க வேண்டாம் என்று கூறியுள்ளார். இது போன்ற தவறான கருத்துகளை நம் குழந்தைகளிடம் திணிக்கக் கூடாது என வேண்டுகோள் வைத்துள்ள அவர், பாலின ஏற்றத்தாழ்வுகளுக்கு இடம் இல்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பு நம் ஒவ்வொருவருக்கும் உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, “பெண்கள் விற்பனைக்கு அல்ல” என தங்கள் வீடுகளில் எழுதி ஒட்டியுள்ள, ஏராளமான பெண்கள் வரதட்சணைக் கொடுமைக்கு எதிராக தங்களது எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.

Categories

Tech |