Categories
மாநில செய்திகள்

எங்கள் வெற்றியை பொறுத்து கொள்ள முடியவில்லையா?…. கைது செய்யப்படும் பா.ஜ.க.வினர்…. பா.ஜ.க. எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் ஆவேசம்….!!!!

பா.ஜ.க.வை சேர்ந்த வானதி சீனிவாசன் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார்.

பா.ஜ.க. கட்சியை சேர்ந்த வானதி சீனிவாசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ஆ. ராசா கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது அவர் இந்து மதம் குறித்து தவறாக பேசினார். இவரின் இந்த பேச்சு தமிழ்நாட்டில் மிகவும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால் தற்போது இருக்கும் மு.க. ஸ்டாலின் அவர்களின் அரசு அவரை கைது செய்யாமல் எங்கள் கட்சியை சேர்ந்த ஏராளமானோரை  கைது செய்தது ஏன்? .

மேலும் அவரின் பேச்சை எதிர்த்து எங்கள் கட்சியினர் போராட்டம் நடத்தினார்கள். அதில் நாங்கள் வெற்றி பெற்று விட்டோம். இதனை பொறுத்துக் கொள்ள முடியாத அரசு எங்கள் கட்சியை சேர்ந்தவர்களை கைது செய்து வருகின்றது.  மேலும் மு.க. ஸ்டாலின் அவர்களின் அரசுக்கு ஜனநாயகத்தின் மீது ஒரு சதவீதம் கூட நம்பிக்கை இல்லை என்பது இதன் மூலம் தெரிகிறது என அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |