Categories
உலக செய்திகள்

“எங்கள் வேலை போனாலும் கவலையில்லை”….இலங்கையில் தொடரும் போராட்டம்…!!!!!!!

இலங்கைக்கு கொழும்புவில் உள்ள ஒரு என்ஜிஓ  அறக்கட்டளை மூலமாக உணவு வழங்கப்பட்டு வருகிறது.

இலங்கையில் பொருளாதார நெருக்கடி நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகின்றது. நாட்டில் போதுமான எரிபொருள் மற்றும் எரிவாயுவை வாங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. அதே சமயம் மக்கள் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற கூட வழி  இல்லாமல் சிரமப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் அரசாங்கத்திற்கு எதிராகவும் அதிபர் பதவிவிலக வேண்டும் எனவும் வலியுறுத்தி வேலை இல்லாதவர்கள் உட்பட பல பேர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தினமும் இரண்டு வேளை உணவிற்காக அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதற்கிடையே இலங்கையின் புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்கே நேற்று நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் நாட்டில் பொருளாதார நிலைமை பற்றிய விளக்கம் அளித்துள்ளார். மேலும் மக்கள் தியாகம் செய்ய தயாராக இருக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டிருக்கின்றார். போராடி வரும் நூற்றுக்கணக்கான மக்கள் கொழும்புவில் உள்ள காலி முகத்திடலில் உணவிற்காக நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.

தினசரி கூலி தொழிலாளர்கள் மற்றும் தற்போதைய நெருக்கடி காரணமாக வேலை இழந்தவர்கள் உட்பட பல பேர் இதில்  அடங்குவர். மேலும் அங்கு கொழும்புவில் உள்ள ஒரு என்ஜிஓ அறக்கட்டளை மூலமாக உணவு வழங்கப்பட்டு வருகிறது. கொழும்புவை சார்ந்த அறக்கட்டளையால் வழங்கப்படும் உணவிற்காக நீண்ட வரிசை காத்திருக்கின்றது. மேலும் அறக்கட்டளையை சேர்ந்த சமூக சேவகர் ஆன அகுஷ்லா பெர்னான்டோ கூறியபோது, உலகம் முழுவதிலிருந்தும் பணம் பொருட்கள் மற்றும் உணவு போன்றவை நன்கொடைகள்  எனது அறக்கட்டளைக்கு கிடைக்கின்றது.

மேலும் இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு உணவு வழங்கி இருக்கின்றோம். ஏப்ரல் 9-ஆம் தேதி முதல் உணவு விநியோகம் செய்ய ஆரம்பித்துள்ளோம். வேலை செய்பவர்கள் மற்றும்  வேலையில்லாதவர்கள் போன்ற பல பேர் இங்கு வந்து செல்கின்றனர். மேலும் போராட்டத்தில் இருந்த  ஒரு சிலர் இங்கு வருகின்றார்கள். அவர்கள் நாங்கள் தலைமுறைக்கான போராட்டம் நடத்துவதால் வேலையை இழப்பதை  பற்றி கவலைப்படுவது இல்லை என தெரிவிக்கின்றனர். எங்கள் வேலை போனாலும் எங்களுக்கு எந்தவிதமான கவலையுமில்லை. ஆனால் வருங்காலத் தலைமுறைக்காக எங்கள் போராட்டம் தொடரும் என கூறியுள்ளனர்.

மக்களை கவனிக்க முடியாமல் நாட்டை ஆள தவறியதால் அதிபர் பதவி விலக வேண்டும் என நாங்கள் விரும்புகின்றோம் என நங்கள் விரும்புகின்றோம் என அவர் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து  உணவு விநியோகம் செய்து கொண்டிருந்த மற்றொரு நபரான ஷெர்வின் ரணதுங்க கூறியதாவது, இலங்கை முழுவதிலும் இருந்து பல்வேறு வகையான மக்கள் இங்கு வருகின்றனர். அவர்கள் தொலைதூரத்தில் இருந்து பேருந்துகள் டாக்ஸிகள் மற்றும் ரயில் போன்றவைகளில் வருகின்றார்கள். அவர்கள் அனைவருக்கும் நாங்கள் உணவை வழங்குகின்றோம் என தெரிவித்துள்ளார்.

Categories

Tech |