Categories
உலக செய்திகள்

“எங்கள சீண்டி பாக்காதீங்க!”…. சும்மா விடமாட்டோம்…. அமெரிக்காவுக்கு கிம் ஜாங் உன் அரசு பகிரங்க எச்சரிக்கை….!!!!

வடகொரியா ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களை மீறி அபாயகரமான ஏவுகணைகள் மற்றும் அணு ஆயுதங்களை சோதித்து வருகிறது. இதனால் சர்வதேச நாடுகள் வடகொரியாவின் மீது கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளது. மேலும் வடகொரியாவில் உணவு பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் மக்கள் பஞ்சத்தில் தவித்து வருகின்றனர். இருப்பினும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் நாட்டின் ராணுவ திறனை வலுப்படுத்துவதில் தான் முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார்.

அந்த வகையில் கண்டம் விட்டு கண்டம் பாயும் “பாலிஸ்டிக்” ரக ஏவுகணையை வடகொரியா சோதித்து பார்த்துள்ளது. அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமெரிக்கா வடகொரியாவின் 5 அதிகாரிகள் மீது பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இந்நிலையில் வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் அரசு ஜோ பைடன் தொடர்ச்சியாக இவ்வாறு மோதல் போக்குடன் செயல்பட்டால் அமெரிக்கா கடுமையான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்று எச்சரித்துள்ளது.

Categories

Tech |