Categories
தேசிய செய்திகள்

எங்கள சும்மா நெனச்சிராதீங்க… நாடு முழுவதும் கொந்தளிக்கும்… விவசாயிகள் எச்சரிக்கை…!!!

மத்திய அரசு வேளாண் சட்டங்களை திரும்பப் பெறவில்லை என்றால் ரயில் மறியல் போன்ற பல்வேறு போராட்டங்கள் விவசாயிகள் களம் இறங்குவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றன. பல்வேறு மாநிலங்களில் உள்ள லட்சக்கணக்கான விவசாயிகள் அங்கு ஒன்று திரண்டு இரவு பகல் பாராமல் போராடி வருகிறார்கள். அவர்களின் போராட்டத்தை கலைக்க போலீசார் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் எந்த ஒரு பலனும் இல்லை.

அதுமட்டுமன்றி மத்திய அரசு விவசாயிகளுடன் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்தியது. இருந்தாலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டத்தை முழுவதுமாக திரும்ப பெறும் வரையில் எங்கள் போராட்டம் தொடரும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.இதனையடுத்து நாடு முழுவதும் பாரத் பந்த் போராட்டம் நடந்தது. அதில் லட்சக்கணக்கான விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர். இன்று 16 வது நாளாக போராட்டம் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில் வேளாண் சட்டத்தை அரசு திரும்பப் பெறவில்லை என்றால் 14ஆம் தேதி முதல் போராட்டம் தீவிரமடையும், ரயில்வே தண்டவாளங்களை முற்றுகை விடுதல் மற்றும் ரயில் மறியல் நடைபெறும் என்று விவசாயிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். நாடு முழுவதும் மக்கள் போராட்டத்தில் இறங்குவார்கள் என்றும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |