கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் நாம் தமிழர் கட்சி சார்பில் கனிமவள கொள்கையை எதிர்த்து கண்டன கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சாட்டை துரைமுருகன் பேசிய கருத்துக்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இதனை தொடர்ந்து முதல்வர் ஸ்டாலினை தவறாகப் பேசியதால் சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டார். மேலும் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டதைக் சுட்டிக்காட்டி மிரட்டல் விடுத்தது காங்கிரஸ் கட்சியினர் இடையே மிகுந்த கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி அவரது சோனியா காந்தியை தனிப்பட்ட முறையில் விமர்சித்து உள்ளதும் காங்கிரஸ்காரர்களின் கோபத்தைத் மென்மேலும் தூண்டி விட்டது. இதனை தொடர்ந்து காங்கிரஸ் எம்பி ஜோதிமணி, எம்எல்ஏ செல்வபெருந்தகை ஆகியோர் சென்னை காவல்துறையினரிடம் தமிழக இளைஞர்களை தவறாக வழிநடத்தி முயற்சிக்கும் சீமானின் மீது தேசத்துரோக பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று புகார் அளித்துள்ளனர். சீமான் மணல் கொள்ளையில் ஈடுபடுகிறார்.
இவரைப் போன்று காங்கிரஸ் கட்சி காரர்கள் எவரும் ஈனப் பிழைப்பு பிழைக்கவில்லை என்று எம்எல்ஏ செல்வபெருந்தகை கடுமையான வார்த்தைகளால் சாடியுள்ளார். இந்நிலையில் சீமான் காங்கிரசினருக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார். அதில் அவர், “எது பயங்கரவாதம்? பயங்கரவாதம் என்பதற்கான வரையறை என்ன? முதலில் இந்த வரையறையை வகுத்து கொண்டு பின்னர் பகிரங்கமாக அதனை வெளியே சொல்லுங்கள்.
இதற்குப் பின்பு எது தேசத்துரோகம், எது பிரிவினைவாதம் என்பதை அறிந்து கொள்ளலாம். மேலும் சாட்டை துரைமுருகனை அவதூறாக பேசினார் என்று விரட்டி விரட்டி கைது செய்தார்கள். ஆனால் ஹெச்.ராஜாவிற்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட பொழுதும் கூட அவரை இன்னும் ஒன்றுமே செய்யவில்லை. உங்களுக்கு தேவை என்றால் இவர்களைப் போன்றவர்களை விட்டுவிடுவார்கள். அப்படி தானே?” என்று கூறியுள்ளார்.