மேல் அதிகாரி தொந்தரவு செய்த காரணத்தினால் கிராம ஊராட்சி மன்ற உதவியாளர் தற்கொலை செய்ய முயற்சி செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
கடலூர் மாவட்டத்திலுள்ள மஞ்சக்குப்பம் பகுதியில் சந்திரசேகர் – மாரியம்மாள் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் மாரியம்மாள் அப்பகுதியில் உள்ள ஊராட்சியில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய மாரியம்மாள் அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் மாரியம்மாளை மீட்டுஅருகிலுள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டுசென்றனர். இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தியபோது மாரியம்மாள் தாசில்தாருக்கு எழுதி வைத்த ஒரு கடிதம் சிக்கியுள்ளது.
அந்தக் கடிதத்தில் கிராம நிர்வாக அதிகாரி மாரியம்மாளிடம் ஆபாசமாக பேசியதாகாவும், அலுவலகம் மற்றும் பீரோ சாவியை பூட்டிவைத்துக் கொண்டு தன்னை வேலை செய்ய விடாமல் தடுத்த காரணத்தினாலும் மிகுந்த மன அழுத்தத்திற்கு தான் உள்ளானதாக கூறியுள்ளார். இதனால் தான் நான் தற்கொலை செய்ய போவதாக அக்கடிதத்தில் அவர் எழுதி வைத்துள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் தாசில்தார் பரமனிடம் கூறியபோது இது பற்றி ஏற்கனவே தனக்கு புகார் வந்துள்ளதாகவும், பெண்ணின் தற்கொலை முயற்சி குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.