வல்லவன் திரைப்படம் குறித்து காதல் பட பிரபல நடிகை சந்தியா பேட்டியில் கூறியுள்ளார்.
காதல் திரைப்படம் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு பிரபலமானார் சந்தியா. இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் வல்லவன் திரைப்படம் பற்றி கூறியுள்ளார். நடிகர் சிம்பு கதாநாயகனாக நடிக்க நயன்தாரா, ரீமாசென் கதாநாயகியாக நடிக்க சந்தியா சிம்புவின் தோழியாக நடித்து வெளியான திரைப்படம் வல்லவன். இத்திரைப்படம் பற்றி சந்தியா பேட்டி ஒன்றில் கூறியுள்ளதாவது, வல்லவன் படத்திற்காக என்னிடம் சொன்ன கதை ஒன்று படத்தை பார்த்தபோது அந்த கதை வேறு. என்னிடம் சொன்ன கதையை உங்களிடம் சொன்னால் வேறு ஒரு திரைப்படம் என எண்ணுவீர்கள் என கூறியுள்ளார்.
ரசிகர்கள் கதை மாறினாலும் இறுதியில் படம் நன்றாக வந்தது. அதுதான் முக்கியம். தலைவன் வேற மாதிரி என கூறுகின்றார்கள். சிம்பு இடையில் சில சறுக்கல்களை சந்தித்து நடிக்காமல் இருந்த நிலையில் தற்போது மீண்டும் என்ட்ரி கொடுத்து நடித்து வருகின்றார். இவர் தற்பொழுது வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்திற்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.