Categories
அரசியல்

எங்குதான் இவ்ளோ பேர் இருந்தார்களோ… இதை சாதனையா சொல்லுறாரு… திமுகவை சீண்டும் ஓபிஎஸ் …!!

தமிழகத்தில் தினமும் கொலை, கொள்ளை நடக்கின்றது என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் விமர்சித்துள்ளார்.

தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொண்டு பேசிய அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இன்றைக்கு என்ன  நிலைமை…. காலையில் செய்தி தாளை திறந்தால் எல்லா பக்கத்திலும் கொலை, கொள்ளை, கொலை, கொள்ளை. தேர்தல் முடிந்த இந்த நான்கரை ஐந்து  மாத காலங்களில் தினந்தோறும் இது நடக்கின்றது.

எங்குதான் இவ்ளோ ரவுடிகள் இருந்தார்களோ….  ஈஸியா வழி பறிப்பு பண்ணலாம், பட்டப்பகலில் கொலை செய்யலாம் என பூரா ரவுடியும் தமிழகத்த்துக்கு  வந்துட்டாங்க. , ரயில்வே நிலையத்தில் பட்டப்பகலில் இளம்பெண்ணை கொலை, இரண்டு பெண்கள் ஸ்கூட்டியில் போயிட்டு இருக்காங்க ஸ்கூட்டியில் இருந்தவங்க செயினை அப்படியே அறுத்து விட்டார்கள். இதுதான் இன்றைக்கு நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.

அந்த நேரத்தில் இது என்ன நாடா ? அழிவுக்காடா என்று கழகத்தின் சார்பாக அறிக்கை விடப்பட்டவுடன், 3000 ரவுடிகளை பிடித்தோம், 4000 ரவுடிகளை பிடித்தோம் என்று சாதனையாக சொன்னார்கள். எல்லா நடந்த முடிந்த பிறகு…. முதலில் எங்கே போனாங்க. இவ்வளவு பிரச்சனைகளும்…  சட்ட ஒழுங்கு சீர்கெட்டும்  இருந்தால் தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்கு யார் வருவார்கள் ? யாரும் வர மாட்டார்கள், அதன் இன்றைய நிலை என விமர்சித்தார்.

Categories

Tech |