கடைக்கு மற்றும் கல்லூரிக்கு சென்ற மாணவிகள் 2 பேர் திடீரென மாயமானது குறித்து போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
தேனி மாவட்டம் பெரியகுளம் அடுத்துள்ள தென்கரை பட்டாளம்மன் கோவில் தெருவில் இடும்பன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் ஜெயஸ்ரீ (17) அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று இரவு கடைக்கு செல்வதாக கூறி சென்ற மாணவி வெகுநேரமாகியும் அவர் வீடு திரும்பாததால் அவரது பெற்றோர்கள் அக்கம்பக்கத்தில் தேடி பார்த்துள்ளனர். அவரை எங்கு தேடியும் கிடைக்காததால் சிறுமியின் தந்தை தென்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதேபோல் பெரியகுளம் டி.கள்ளிப்பட்டியில் வசித்து வரும் பாலதர்ஷினி(20) என்பவர் தேனியில் ஐ.டி.ஐ 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று கல்லூரிக்கு சென்ற மாணவி வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது பெற்றோர்கள் தென்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த இரு வழக்குகளையும் பதிவு செய்த காவல்துறையினர் மாணவிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.