Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

“எங்கேயும் போகவேண்டாம்”, வீட்டிலிருந்தே போடுங்க…. ராணிப்பேட்டையில் சூடுபிடிக்கும் தேர்தல் களம்….!!

ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள முதியவர்களும், மாற்றுத்திறனாளிகளும் வீட்டிலிருந்தபடியே தபால் ஓட்டினை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்நிலையில் தேர்தல் குழு 100 சதவீத வாக்கு பதிவிற்காக ஆங்காங்கே விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதோடு மட்டுமல்லாமல் வாக்கு பதிவிற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது.

அந்த வகையில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் 80 வயதிற்கு மேற்பட்டவர்களும், ஊனமுற்றோர்களும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களும் வீட்டிலிருந்தபடியே தபால் ஓட்ட மூலம் தங்களது வாக்கை பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் கிளான்ஸ்டன் புஷ்பராஜ் தெரிவித்துள்ளார். இதனிடையே 697 நபர்களுக்கு தபால் மூலம் வாக்களிக்க முன்னேற்பாடு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள நான்கு சட்டமன்ற தொகுதிகளில் ஒவ்வொரு தொகுதிகள் வீதம் 3 குழுக்கள் நியமிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.

Categories

Tech |