Categories
கேரளா மாநிலம் தேசிய செய்திகள்

எங்கே என் எஜமானர்…? தேடி அலைந்த ”குவி”…. 8மாதங்களுக்கு பின் ஒப்படைக்கப்பட்ட நாய்…. கேரளாவில் நெகிழ்ச்சி சம்பவம் ….!!

மூணாறில்  நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த தனது எஜமானரை தேடிச் சென்றபோது என்ற குவி என்ற நாய் கிட்டத்தட்ட எட்டு மாதங்களுக்கு பின்பு எஜமானர் குடும்பத்துடன் இணைந்த நெகிழ்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கேரள மாநிலம் மூணாறு பகுதியில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஏற்பட்ட நிலச்சரிவில் 34 வீடுகளில் தங்கி இருந்த 34 குடும்பத்தைச் சார்ந்த 82 பேர்களில் பலி 12 பேர் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டனர். 70 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த தேடலின் போது  குவி என்ற நாய் நிலச்சரிவில் சிக்கிய தனது எஜமானரின் குடும்பத்தை தேடி கிட்டத்தட்ட எட்டு நாட்கள் அங்கே இருந்தது.

அப்போது தனது மோப்ப சக்தி மூலமாக தன்னை வளர்த்த எஜமானரின் இரண்டரை வயது குழந்தை தனுஷ்காவின் சடலத்தை மீட்டது. இந்நிலையில் மீட்புப்பணிக்காக பெட்டிமுடி வந்த கேரள மாநில மோப்பநாய் பயிற்சியாளரான அஜித் குவியின் செயல்களால் அதிகம் ஈர்க்கப்பட்டு, அதற்கு உணவு அளித்து அதனோடு பழகி வந்தார்.குவியினை வளர்க்க அவருக்கு அனுமதி கிடைத்த நிலையில் இடுக்கி  மாவட்ட காவல்துறையில் குவி இணைக்கப்பட்டது.

குவி காவல்துறையால் தத்தெடுக்கப்பட்ட காலகட்டத்தில் குழந்தை தனுஷ்காவின் குடும்பத்தில் அவரது 72 வயதான பாட்டி பழனியம்மா என்பவரும், அவரது மகன் தீபன் என்பவரை மட்டுமே உயிருடன் இருந்தனர். இவர்கள் இருவரும் பலத்த காயங்களோடு பல மாதங்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் தற்போது நல்ல உடல்  நிலையில் இருக்கின்றனர்.

இதனிடையே சமீபத்தில் இவர்கள் இருவரும் தங்களின் நாய் குவியை  தங்களோடு கொள்ள ஆசைப்படுவதாக ஊடகங்கள் வாயிலாக கூறியிருந்தனர். இது காவல்துறையினருக்கு தெரியபடுத்த அவர்களும்  அதற்கான நடவடிக்கையை எடுக்க தொடங்கினர். அதன்படி திருவனந்தபுரத்தில் உள்ள போலீஸ் தலைமையகத்தின் அதிகாரிகள் இந்த பிரச்சினையில் தலையிட்டு குவி தன் குடும்பத்துடன் மீண்டும் இணைவதற்கு வழிவகுத்தன.

இந்நிலையில் காவல் அதிகாரிகள் குவியை அழைத்து கொண்டு பழனியம்ம வீட்டிற்கு வந்தனர். அப்போது பழனியம்மாவை பார்த்த குவி  ஓடிச் சென்று அவருடன் ஒட்டிக் கொண்டது. எங்கு சென்றாலும், எத்தனை காலங்கள் ஆனாலும் குவியின் அந்த பாசம் மாறாமல் இருப்பது அனைவரையும் கண்கலங்க செய்துள்ளது.

Categories

Tech |