Categories
சினிமா

எங்கே நிம்மதி…? இருவரும் ஒரே வழியா….? தனுஷை தொடர்ந்து ரஜினிகாந்த்…!!!

நடிகர் தனுஷ் செய்வதைப் போன்றே ரஜினிகாந்தும் செய்யப் போவதாக வெளியான தகவல் இணையதளங்களில் வேகமாக பரவிக்கொண்டிருக்கிறது.

நடிகர் தனுஷ், மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்வதாக அறிவித்து விட்டார். அவர், இதற்கு முன்பு தன் மனைவி ஐஸ்வர்யாவுடன் பிரச்சனை ஏற்படும் போதெல்லாம் புதிய திரைப்படங்களில் நடிப்பதற்கு தயாராகி விடுவாராம். தன் கவனத்தை வேறு பக்கம் திசை திருப்புவதற்காக அப்படி செய்வாராம்.

அதேபோல் தற்போதும் மனைவியை பிரிந்தவுடன் அடுத்தடுத்த திரைப்படங்களில் நடிப்பதற்கு ஒப்புக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்தும் தனுஷின் வழியில் மகளின் வாழ்க்கை பற்றிய கவலையில் இருந்த நிலையில், தற்போது திரைப்படங்களில் நடிக்க  தீர்மானித்திருக்கிறார்.

மகள் ஐஸ்வர்யாவிடம் பல முறை பேச்சுவார்த்தை நடத்தியும் அவர் முடிவை மாற்றிக் கொள்ளாதது ரஜினியை அதிகம் வருத்தமடையச் செய்திருக்கிறது. மேலும், நடிகர் ரஜினி தனக்கு நெருங்கிய வட்டாரங்களிடம் பணம், புகழ், மரியாதை, குடும்பம் என்று அனைத்தும் இருந்தும் நிம்மதி மட்டும் இல்லாமல் இருக்கிறேன். இந்த நிலை எப்போது மாறும்? என்று வருத்தத்துடன் கூறியிருக்கிறார். எனவே, தற்போது தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க தீர்மானித்திருக்கிறார். அப்போதாவது, நிம்மதி கிடைக்கிறதா? என்று நினைத்திருப்பார் போலும்..

Categories

Tech |