Categories
அரசியல்

“எங்க அமைச்சர்களுக்கு இந்தி தெரியாது,ஆங்கிலமும் புரியாது”… அமித்ஷாவுக்கு கடிதம் எழுதிய முதல்வர்.!!!

எங்கள் மந்திரிகளுக்கு இந்தியும் தெரியாது, ஆங்கிலமும் புரியாது எனவே புதிய தலைமைச் செயலாளர் ஏமாற்றிவிட்டு மிசோ மொழி தெரிந்த தலைமைச் செயலாளரை நியமிக்க வேண்டுமென மிசோரம் மாநில முதல்வர் முதல்-மந்திரி அமித்ஷாவுக்கு கடிதம் எழுதியுள்ளார். மிசோரம் மாநிலத்தில் தலைமைச் செயலாளராக இருந்த லால்னுமாவியா சாகோ ஓய்வு பெற்றுவிட்டார். குஜராத் கேடரான சாகோ, ஓய்வு பெற்றபின் அவருக்குப் பதிலாக மத்தியஉள்துறை அமைச்சகம், ரேணு சர்மாவை புதியதலைமைச் செயலாளராக நியமித்தது.

ஆனால் அவருக்கு மிசோ மொழி தெரியாமல் இந்தி மற்றும் ஆங்கிலம் மட்டுமே தெரியும், என்பதால் நிர்வாக ரீதியாக பல சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் அம்மாநில முதல்வர்  ஜோரம்தங்கா உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் எங்களது மந்திரிகளுக்கு இந்தியும் தெரியாது, ஆங்கிலமும் புரியாது. ஆதலால் புதிய தலைமைச் செயலாளர் ஏமாற்றிவிட்டு மிசோ மொழி தெரிந்தவரை நியமிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். மிசோரத்தில் கூடுதல் தலைமைச் செயலாளராக இருக்கும் ஜே.சி.ராம்தங்காவை தலைமைச் செயலாளராக நியமிக்கவும் எனவும் மிசோரம் மாநில முதல் மந்திரி வலியுறுத்தியுள்ளார்.

Categories

Tech |