அமெரிக்க துணை அதிபர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள கமலா ஹாரிஸ் வெற்றிக்கு சொந்த ஊர் மக்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவின் துணை அதிபர் பதவிக்கு ஜனநாயக கட்சி சார்பாக போட்டியிட்ட இந்திய வம்சாவளி பெண்ணான கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றுள்ளார். அவரின் சொந்த ஊர் தமிழகத்தின் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள துளசேந்திரபுரம் என்ற கிராமம். கமலா ஹாரிஸ் தாய்வழி தாத்தா பாட்டி ஆகியோர் மன்னார்குடியை சேர்ந்தவர்கள். அமெரிக்க துணை அதிபர் தேர்தலில் தமிழகத்தை பூர்விகமாக கொண்ட பெண் ஒருவர் போட்டியிட்டதால் மன்னார்குடி மக்கள் அனைவரும் பெருமகிழ்ச்சி அடைந்தனர்.
அவர் வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்து தெரிவித்து பதாகைகள் வைத்து ஆதரவு தெரிவித்து வந்தனர். அதுமட்டுமன்றி தங்கள் வீடுகளின் முன்பு ரங்கோலி வரைந்து வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்நிலையில் கமலா ஹாரிஸ் வெற்றி பெற்ற செய்தி அறிந்தவுடன், அந்த கிராம மக்கள் அனைவரும் பெரும் மகிழ்ச்சி அடைந்து, பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் வெற்றியைக் கொண்டாடி வருகிறார்கள். அதுமட்டுமன்றி தங்கள் வீடுகளின் முன்பு ரங்கோலி வரைந்து வாழ்த்து தெரிவித்துள்ளனர்.