எருமை மாடு பால் கறக்க அனுமதி மறுப்பதாக கூறி மத்திய பிரதேசத்தை சேர்ந்த விவசாயி ஒருவர் போலீசில் புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம், நயாகாவ் கிராமத்தைச் சேர்ந்தவர் பாபுலால் என்று விவசாயி வீட்டில் எருமை மாடு ஒன்றை வளர்த்து வருகிறார். இந்த எருமை மாடு திடீரென்று சில நாட்களாக பால் கறக்க அனுமதிக்காமல் முரண்டு பிடித்து வருகிறது. இதனால் மாட்டுக்கு யாரோ சூனியம் வைத்து இருப்பதாக கருதிய அவர் எருமை மாட்டை அழைத்துக் கொண்டு காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார். பாபுலாலின் புகாரை கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் அவரிடம் மாட்டை கால்நடை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்படி அறிவுரை கூறி அனுப்பினார்.
मध्य प्रदेश: भोपाल में भैंस को लेकर थाने पहुंचा शख्स, बोला- 'साहब! भैंस दूध दुहने नहीं दे रही मदद कीजिए' pic.twitter.com/AY6wki9tNP
— Newsroompost (@NewsroomPostCom) November 15, 2021
பின்னர் கால்நடை மருத்துவரிடம் சென்ற பிறகு எருமை மாடு பால் கொடுக்க ஆரம்பித்துள்ளது. இதனால் பாபுலால் மகிழ்ச்சி அடைந்து மீண்டும் காவல் நிலையத்திற்கு வந்து மாடு பால் கொடுக்க ஆரம்பித்து விட்டது என்று கூறி நன்றி தெரிவித்தார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களை வியப்பில் ஆழ்த்தியது. மேலும் இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.