Categories
தேசிய செய்திகள்

எங்க கட்சியில சேருங்க… அழுத்தம் கொடுத்த நிலையில்… தூக்கில் தொங்கிய பாஜக நிர்வாகி..!!

மேற்கு வங்கத்தில் பாஜக நிர்வாகி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

மேற்கு வங்கத்தில் கிழக்கு மிட்னாபூர் என்ற மாவட்டத்தில் பாஜக நிர்வாகி பூர்ணசந்திர தாஸ் என்பவர் இன்று காலை அவரின் வீட்டின் அருகே தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்துள்ளார். 44 வயதுடைய இவர், தெற்கு வங்காள மாவட்டத்தின் ராம்நகர் பகுதியில் பாஜக சாவடி தலைவராக இருந்து வருகிறார். இத்தகைய சம்பவம் பற்றி அவர் குடும்பத்தார் கூறும்போது, உள்ளூர் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் சென்ற சில தினங்களாகவே தங்கள் கட்சியில் சேர பூர்ண சந்திர தாஸ்-க்கு அழுத்தம் கொடுத்து வந்துள்ளனர். இருந்தாலும் அவர் மறுப்பு கூறியுள்ளார். இந்நிலையில் டி.எம்.சி தலைவர்களுடன் கூட்டம் நடத்துவதற்கு திட்டம் தீட்டி இருந்த நிலையில், அவர் உயிரிழந்துவிட்டார் என்று குடும்பத்தினர் கூறியுள்ளனர்.

Categories

Tech |