Categories
தேசிய செய்திகள்

எங்க கிராமத்துக்குள்ள சரக்கு சாப்பிட்டு வந்தா… இதுதான் தண்டனை… எங்கு தெரியுமா…???

குஜராத் மாநிலம் மோதிபுரா என்ற கிராமத்தில் மது குடித்துவிட்டு வருபவர்களுக்கு வித்தியாசமான தண்டனை வழங்கப்பட்டு வருகின்றது.

குஜராத் மாநிலம், மோதிபுரா என்ற கிராமத்தில் யாரும் மது அருந்தக் கூடாது என்று கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதையும் மீறி மது குடித்து வருபவர்களுக்கு இரும்பு கூண்டுகள் ஒன்று தயாரிக்கப்பட்டு அதற்குள் அவர்களை அடைக்கும் புதிய திட்டத்தை அந்த கிராம பஞ்சாயத்து தலைவர் பாபு நாயக் கொண்டுவந்துள்ளார். மது அருந்துபவர்களுக்கு பாடம் புகட்டும் வகையில் இந்தத் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்காக இரும்பு கூண்டுகள் தயாரிக்கப்பட்டன. சமீபத்தில் அந்த கிராமத்திற்குள் ஒருவர் மது அருந்தி விட்டு வந்ததால் அவர் இந்த இரும்பு கூண்டுக்குள் அடைக்கப்பட்டார்.

பின்னர் அவர் அபராத தொகையை செலுத்திய பிறகு விடுதலை செய்யப்பட்டார். அவர் செலுத்தப்பட்ட தொகை அந்த கிராமத்தின் பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களுக்காக பயன்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்தத் திட்டத்திற்கு மோதிபுரா கிராமத்தின் அருகில் உள்ள கிராம மக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். மேலும் இருபத்தி மூன்று கிராமங்களில் மது அருந்துபவர்களை இரும்பு கூண்டுகளில் அடைக்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த தண்டனை மூலம் மது குடிப்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளதாக கிராம மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |