Categories
மாநில செய்திகள்

எங்க குடும்பத்தில் 18பேருக்கு கொரோனா – எடப்பாடி சொன்ன அதிர்ச்சி தகவல்…!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி,  மக்கள் அச்ச உணர்வோடு இருக்கிறார்கள். அதை அரசாங்கம் தான் சரி செய்யணும். மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். நோய் பரவலை தடுப்பதற்கு நான் சொன்ன வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். நோய் வந்த பிறகு அதற்கு அதிகமாக தாக்கம் இருக்காது.

அதனால தடுப்பூசி போட்ட அவர்களுக்கெல்லாம் கொரோனா வைரஸ் வராது என்று கிடையாது‌. வருகிறது… இன்றைக்கு தடுப்பூசி போட்ட அவர்கள் அனைவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று வருகிறது, ஆனால் உயிருக்கு ஆபத்து இல்லை. ஆனால் அதையும் தடுக்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய கோரிக்கை.  அதிமுக ஆட்சியில் கொரோனா வைரஸ் பரவலை தடுத்தோம். காய்ச்சல் முகாம் எல்லா பகுதிகளிலும் நடத்தினோம்‌. இது எல்லாம் இந்த அரசாங்கத்தில் செய்வதில்லை.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை செய்யவில்லை. அதனால்தான் கொரோனா வைரஸ் பரவல் அதிகமாக இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் இன்றைக்கு கணக்கு குறைத்து காட்டிக் கொண்டிருக்கிறார்கள். இன்றைக்கு கர்நாடகத்தில் அதிகமாக காட்டுகிறார்கள். கேரளாவில் உண்மையை காட்டுகிறார்கள். ஆனால் தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைத்து காட்டுகிறார்கள். மக்கள் கிட்ட தவறான கருத்து சொல்றாங்க.

எங்க குடும்பத்தில் எடுத்துக்கொண்டால் கூட கிட்டத்தட்ட 18 பேருக்கு வந்திருக்கு. எங்களுடைய கட்சி உடைய நிர்வாகிகள் அவர்களுடைய குடும்பத்தினர் ஏழு பேருக்கு வந்து இருக்கு. இப்படி கொத்துக்கொத்தாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள். ஆனால் கணக்கு மட்டும் குறைத்து குறைத்து காட்டுகிறார்கள்‌.

காய்ச்சல் முகாம் நடத்த வேண்டும், வீடு வீடாக மக்களை சந்தித்து அவர்களுக்கு ஏதாவது நோய்த் தொற்று இருக்கிறதா ? என்பதை கண்டறிந்து அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவி செய்ய வேண்டும்.  அப்படி செய்தால் தான் நோய் பரவலை கட்டுப்படுத்த முடியும் என தெரிவித்தார்.

Categories

Tech |