Categories
சினிமா தமிழ் சினிமா

எங்க குடும்பம் பிரியாமல் ஒன்றாக வாழ்வதற்கு அவர்தான் காரணம்!…. நெகிழ்ந்த கவுதம் கார்த்திக்….!!!!!

கவுதம் கார்த்திக் – மஞ்சிமா மோகன் இருவரும் சென்ற நவம்பர் 28 ஆம் தேதி திருமணம் செய்துகொண்டனர். அவர்களது திருமண நிகழ்ச்சியில் திரையுலகினர் பங்கேற்று வாழ்த்தினர். இந்நிலையில் நடிகர் கவுதம் கார்த்திக் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன் பாட்டியின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்ற ஒரு புகைப்படத்தை வெளியிட்டு, அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி பதிவு ஒன்றை போட்டிருக்கிறார்.

அதில், மிகவும் இனிமையான அன்பான நபரான என் பாட்டிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். என் அன்பான பாட்டி எங்களது முழு குடும்பத்தில் மதிப்புமிக்க நபராக உள்ளார். எங்களது குடும்பத்தை பிரிய விடாமல் ஒன்றாக வைத்திருக்கும் அவருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். எங்களை எப்போதும் சிரிக்க வைத்துக்கொண்டிருக்கும் என் பாட்டி மகிழ்ச்சியாக இருக்க நான் இறைவனை பிரார்த்திக்கிறேன் என அப்பதிவில் தெரிவித்திருக்கிறார்.

Categories

Tech |