Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

எங்க கோரிக்கைகளை நிறைவேற்றுங்க..! நியாயவிலைக்கடை பணியாளர் சங்கத்தினர்… பரபரப்பு ஆர்ப்பாட்டம்..!!

நாகையில் நியாயவிலைக்கடை பணியாளர் சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நியாயவிலைக் கடை பணியாளர் சங்கத்தினர் நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைவர் தமிழ்ச்செழியன் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர் சுரேஷ் கண்ணா முன்னிலை வகுத்தார். தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க மாவட்ட தலைவர் வெற்றிச்செல்வன், மாநில நிர்வாக குழு உறுப்பினர் பாஸ்கரன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள். அப்போது புழுங்கலரிசியை நியாயவிலை கடைகளுக்கு 3 ராகமாக வழங்காமல், ஒரே ரகமாக வழங்க வேண்டும்.

திருவிடைமருதூர் மற்றும் திருக்குவளை வட்டம், வடக்கு பனையூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் பல மாதங்களாக பணியாளர்களுக்கு வழங்கப்படாமல் உள்ள ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும். அனைவருக்கும் கொரோனா கால பலன்கள் வழங்கப்பட வேண்டும். நரிமணம், சிக்கல், எரவாஞ்சேரி ஆகிய பகுதிகளில் உள்ள நியாய விலை கடையில் பணிபுரியும் விற்பனையாளர்களுக்கு பதவி உயர்வு அளிக்க வேண்டும். சிறப்பு நிலை மற்றும் தேர்வு நிலையில் உள்ள பணியாளர்கள் அனைவருக்கும் அரசாணை நிலை எண் 25-ன் படி ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

Categories

Tech |