மியான்மர் அரசியல் நிலவரத்தை இந்தியா மிக உன்னிப்பாக கவனித்து வருகிறது என வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்து தெரிவித்துள்ளது.
மியான்மாரில் ஆட்சி ராணுவம் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து இருப்பதற்கு அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. அங்குள்ள அரசியல் நிலவரம் குறித்து இந்தியா தனது கவலையை வெளிப்படுத்தி உள்ளது. மேலும் மியான்மரில் அரங்கேறி வரும் அடுத்தடுத்த அரசியல் நிகழ்வுகளை மிக உன்னிப்பாக கவனித்து வருவதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மியான்மாரில் ஜனநாயகம் தழைத்தோங்க இந்தியா எப்போதும் ஆதரவாக இருந்து வந்திருக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளது. மேலும் சட்டத்தின் ஆட்சியும் ஜனநாயகம் நடைமுறைகளும் அங்கு நிலை நிறுத்தப்படும் என்றும் மத்திய அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.