Categories
மாநில செய்திகள்

“எங்க தரப்பு வாதங்களையும் கேளுங்க” ஓபிஎஸ்-ஐ முந்திக் கொண்ட இபிஎஸ்…. இனி எல்லாம் டெல்லி கையில்….!!!!

அதிமுக கட்சியில் ஒற்றை தலைமை பிரச்சனையானது விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தலைமை பொறுப்புக்காக போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றனர். கடந்த 11-ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் தொடர்பாக முதலில் ஓ. பன்னீர் செல்வத்திற்கு ஆதரவாக தீர்ப்பு வந்தாலும், பின்னர் எடப்பாடி செய்த மேல்முறையீட்டில் இபிஎஸ்-க்கு ஆதரவாக தீர்ப்பு வந்தது. இதை எதிர்த்து ஓபிஎஸ் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய இருக்கிறார். இந்த சூழலில் ஓபிஎஸ்-க்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக எடப்பாடி பழனிச்சாமி முன்கூட்டியே உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார். அதாவது ஓபிஎஸ் தாக்கல் செய்யும் மனு தொடர்பான வழக்கை விசாரிப்பதற்கு முன்பாக எங்கள் தரப்பு நியாயத்தையும் கேட்க வேண்டும் என கேவியட் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு யாருக்கு சாதகமாக வரும் என்ற குழப்பம் தொண்டர்கள் மத்தியில் தற்போது எழுந்துள்ளது. இந்நிலையில் அதிமுக கட்சியின் செய்தி தொடர்பாளர் மருது அழகுராஜ் தனியார் youtube சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அவர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு தொடர்பான தீர்ப்பு வருவதற்கு முன்பாக இபிஎஸ் பக்கம் உள்ள நிர்வாகிகள் பலர் ஓபிஎஸ் பக்கம் வந்துவிட தயாராக இருந்தார்கள். ஆனால் தீர்ப்பு சாதகமாக வரட்டும் என்று கூறினார்கள். ஆனால் தற்போது நிலைமை மாறிவிட்டதால் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று கூறிவிட்டனர். இதனால் எடப்பாடிக்கு கிடைத்த வெற்றி தற்காலிகம் மட்டுமே.

எங்களுக்கு சாதகமான விஷயங்கள் விரைவில் நடக்கும். ஒருவேளை எடப்பாடி பழனிச்சாமி கட்சியை கைப்பற்றினாலும் அவருக்கு வெற்றி என்பது எட்டா கனியாக தான் இருக்கும். ஏனெனில் வாக்குகள் பிளவுபடும். இதனால் திமுகவுக்கு சாதகமாகவே எல்லாம் அமைந்து விடும். அதிமுக கட்சியால் ஜனநாயக ரீதியில் எதிர்க்கட்சியாக செயல்பட முடியாமல் போய்விடும் என்று கூறியுள்ளார். மேலும் அதிமுக கட்சியில் நிலவும் உட்கட்சி பிரச்சனைகள் முடிவடையும் வரை திமுக சச்சரவின்றி நடை போடும் என்பதில் ஐயமில்லை. இதனால் கட்சியின் எதிர்காலம் என்னவாகும் என்பது தான் தற்போது தொண்டர்களின் எண்ணமாக இருக்கிறது.

Categories

Tech |