இலங்கையில் தனது காதலியை பார்ப்பதற்காக இளைஞர் ஒருவர் பேருந்தை திருடி கொண்டு சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கை பிலியந்தலை பஸ் டிப்போவில் நேற்று இரவு அரசு பேருந்து டிரைவர் பேருந்தை நிறுத்திவிட்டு ஆசிய கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியை காண டிப்போவிற்கு சென்றுள்ளார். மேலும் சிலர் உணவு வாங்க சென்றுள்ளனர். திரும்பி வந்து பார்த்தபோது நிறுத்தி வைத்திருந்த இடத்தில் பஸ் காணாமல் போனது. இது தொடர்பாக டிரைவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பெயரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது கெஸ்தேவா புளியந்தலை சந்திப்புக்கு அருகில் உள்ள சோதனை சாவடியில் இருந்து பேருந்து சென்றதை கண்ட அதிகாரிகள் பேருந்து தடுத்து நிறுத்தி தப்பியோட முயன்ற வாலிபரை கைது செய்தனர். அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் தனது காதலியை பார்த்துவிட்டு திரும்பும் போது போலீசாரால் கைது செய்யப்பட்டதாக வாலிபர் தெரிவித்தார். நேற்று இரவு எட்டு மணிக்கு பிறகு தனது காதலியை சந்திக்க ஏற்பாடு செய்ததாக தெரிவித்த வாலிபர் பேருந்து நிலையத்திற்கு வந்த போது பஸ் எதுவும் இயங்கவில்லை. இதனால் டிப்போவில் நிறுத்தி வைத்திருந்த பஸ்ஸை எடுத்துச் சென்றதாக தெரிவித்தார். இந்த சம்பவம் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.