திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே வேலை கிடைக்காத மனவேதனையில் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கூவனூத்து புதூர் கிராமத்தில் செல்வராஜ் எனும் விவசாயி வசித்து வருகிறார். இவருக்கு ராஜ்குமார் (27) என்ற மகன் இருந்தார். இவர் டிப்ளமோ முடித்து விட்டு அதன் பின் வேலை தேடி வந்துள்ளார். ஆனால் பல இடங்களுக்கு சென்றும் அவருக்கு வேலை கிடைக்கவில்லை. இதனால் மனவேதனை அடைந்த ராஜ்குமார் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத சூழ்நிலையில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
அதனை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்துவிட்டார். இந்த தற்கொலை குறித்து சாணார்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.