ரஷ்ய படைகள் உக்ரைன் எல்லையில் துருப்புகள், ஆயுதங்கள், சுகாதார சேவைகள் மற்றும் ரத்த வங்கி அமைத்து படையெடுப்பதற்காக தயார் நிலையில் உள்ளனர். இந்நிலையில் உக்ரைனுக்கு ஆதரவாக கனடா, அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட நாடுகள் ஆயுதங்களை குவித்து வருகின்றது. இந்த நிலையில் தற்போது 15 வயது நிரம்பிய சிறுவர்கள் தற்காப்புக்காக ஆயுதப்பயிற்சியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் உக்ரைனில் உள்ள சிறுவர்கள் மற்றும் இளம்வயதினர் தங்கள் நாட்டை பாதுகாக்க உயிரையும் கொடுக்க தயார் என்று கூறி பயிற்சியில் இறங்கியுள்ளதாக ராணுவத்தினர் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த செய்தி உலக அரங்கையே பெரும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.