Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

12 மாசம்…! நல்ல உறவு இருக்கும்போது….. எங்க நாட்டுக்கு வர மாட்டீங்களா….. ஏன் இந்த அறிக்கை?….. அனுபவம் இல்லாத பிசிசிஐ என சாடிய அப்ரிடி..!! 

கடந்த 12 மாதங்களில் இரு நாட்டு உறவுகளும் மேம்பட்டுள்ளதாகவும், தற்போது ஷாவின் அறிக்கை இந்தியாவில் கிரிக்கெட் நிர்வாக அனுபவம் இல்லாததை நிரூபிக்கிறது என்றும் அப்ரிடி  சாடியுள்ளார்..

ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் கடந்த 16ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தியா தனது முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை 23ஆம் தேதி எதிர்கொள்கிறது.. இந்த டி20 தொடர் முடிந்த பின் அடுத்த ஆண்டு ஆசிய கோப்பை தொடர் மீண்டும் நடைபெறுகிறது.. ஆனால் இந்தமுறை பாகிஸ்தானில் நடைபெறும்.. ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் நிர்வாகக் குழுவின் முடிவின்படி அடுத்த ஆண்டு ஆசிய கோப்பை தொடரை பாகிஸ்தானில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 2023 ஆசிய கோப்பையை நடத்தும் ஹோஸ்டிங் உரிமையை பாகிஸ்தான் பெற்றுள்ளது.

இந்நிலையில் நேற்று (அக்டோபர் 18), இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) செயலாளர் ஜெய் ஷா நிருபர்களிடம் கூறியதாவது, 2023 ஆசிய கோப்பை விளையாட பாகிஸ்தானுக்கு இந்தியா செல்லாது, மேலும் இந்தியா ஒரு நடுநிலையான இடத்தில நடைபெறும் என உறுதிப்படுத்தினார். இதற்கு பதிலடியாக, ஷாவின் கருத்துக்கு எதிர்வினையாக, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) இந்தியாவில் 2023 உலகக் கோப்பையை புறக்கணிக்க முயற்சிக்கும் என்று சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐசிசியின் எஃப்டிபி காலண்டரின்படி 2023 ஆசிய கோப்பை மற்றும் 2025 சாம்பியன்ஸ் டிராபியை பாகிஸ்தான் நடத்த உள்ளது. இரு நாடுகளுக்கும் இடையேயான அரசியல் பதற்றம் காரணமாக இந்திய அணி 2008 முதல் பாகிஸ்தானில் விளையாடவில்லை. தற்போது ஜெய் ஷாவின் இந்த கருத்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் இடையே மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அடுத்த மாதம் மெல்போர்னில் திட்டமிடப்பட்டுள்ள அடுத்த ஐசிசி வாரியக் கூட்டத்தில் ஷாவின் கருத்துகளுக்கு எதிராக பிசிபி எதிர்ப்பு தெரிவிக்கப் போகிறது என்று மூத்த பிசிபி ஆதாரம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சயீத் அன்வர் மற்றும் ஷாஹித் அப்ரிடி உட்பட பல பாகிஸ்தான் ரசிகர்கள் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் ஷாவின் அறிக்கைக்கு கோபமாக பதிலளித்துள்ளனர். முன்னாள் தொடக்க வீரர், சயீத் அன்வர் தனது ட்விட்டர் பக்கத்தில், அனைத்து சர்வதேச அணிகளும் சர்வதேச கிரிக்கெட் வீரர்களும் பாகிஸ்தானுக்கு வரும்போது பிசிசிஐக்கு என்ன பிரச்சனை. பிசிசிஐ ஆசியக்கோப்பைக்கு நடுநிலையான இடத்திற்குச் செல்லத் தயாராக இருந்தால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும் (பிசிபி) அடுத்த ஆண்டு இந்தியாவில் நடக்கும் உலகக்கோப்பைக்கு நடுநிலையான இடத்திற்குச் செல்ல தயாராக இருக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

அதேபோல பாகிஸ்தானின் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடியும் தனது ட்விட்டரில், கடந்த 12 மாதங்களில் இரு தரப்புக்கும் இடையே சிறந்த தோழமை ஏற்படுத்தப்பட்டு, 2 நாடுகளில் நல்ல உணர்வை ஏற்படுத்திய நிலையில், #T20WorldCup போட்டிக்கு முன்னதாக BCCI  ஏன் இந்த அறிக்கையை வெளியிடுகிறது? இது இந்தியாவில் கிரிக்கெட் நிர்வாக அனுபவம் இல்லாததை பிரதிபலிக்கிறது என்று காட்டமாக தெரிவித்திருந்தார்.

Categories

Tech |