கொரோனா தொற்றால் புதுச்சேரியில் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்துள்ளதால் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு அலங்கார பொருட்கள் விற்பனை மந்தமாக உள்ளதாக வியாபாரிகள் வேதனை தெரிவித்தனர்.
புதுச்சேரி கடற்கரைகளில் ஆங்கில புத்தாண்டு கொண்டாடவும், கிறிஸ்துமஸ் தினத்தன்று சர்ச்சுகளில் பிரார்த்தனைகளுக்கும் அனுமதி வழங்கப்படுவதாக புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில் கொரோனா தொற்று பரவல் காரணமாக புதுச்சேரிக்கு சுற்றுலா பயணிகள் வருகை கடந்த ஆண்டை காட்டிலும் மிக குறைவாக காணப்படுகிறது.
இதனால் புதுச்சேரியில் தங்கும் விடுதிகள், ஓட்டல்கள், வர்த்தக நிறுவனங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மெஷின் வீதி, நேரு வீதி பகுதியில் கிறிஸ்துமஸ் கொண்டாட பொருட்களுக்கான ஸ்டார்ஸ், கிறிஸ்துமஸ் தாத்தா, சுருபகங்ள் அலங்காரப் பொருட்கள், விற்பனையகங்கள் கொரோன பரவல் காரணமாக குறைந்துள்ளதாக வியாபாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.