Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

எங்க பையன் சாவில் மர்மம் இருக்கு..! சிவகங்கையில் பரபரப்பு புகார்… போலீசார் தீவிர விசாரணை..!!

சிவகங்கை தேவகோட்டையில் கார் டிரைவர் மர்மமான முறையில் நீரில் மூழ்கி சடலமாக கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டை சரஸ்வதி வாசக சாலை பகுதியில் சுப்பிரமணியம் என்பவர் வசித்து வருகிறார். இவர் கிராம நிர்வாக அதிகாரியாக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இவருக்கு கார்த்திக் என்ற மகன் இருந்தார். கார்திக்கிற்கு திருமணம் ஆகவில்லை. இவர் கார் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று கார்த்திக் சிலம்பணி ஊருணியில் நீரில் மூழ்கி சடலமாக கிடந்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து நகர் காவல் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் கார்த்திக்கின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த மரணத்தில் மர்மம் இருப்பதாக கார்த்திக்கின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |