ராஜ்குமார் சேதுபதி மற்றும் நடிகை ஸ்ரீபிரியாவின் மகள் சினேகா சேதுபதிக்கும், ராஜேஷ் சர்மா மற்றும் சாதனாவின் மகன் அன்மோல் சர்மாவுக்கும் பிப்ரவரி மாதம் 6-ஆம் தேதி லண்டனில் திருமணம் நடக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிப்ரவரி மாதம் 6-ஆம் தேதி திரைப்பட தயாரிப்பாளர் ராஜ்குமார் சேதுபதி மற்றும் நடிகை ஸ்ரீபிரியாவின் மகள் சினேகா சேதுபதிக்கும், ராஜேஷ் சர்மா மற்றும் சாதனாவின் மகன் அன்மோல் சர்மாவுக்கும் லண்டனில் திருமணம் நடக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா தொற்று பரவலின் காரணமாக விசா நடைமுறைக்கு உதவும் வகையில் லண்டனில் திருமணம் பதிவு செய்யப்பட உள்ளது. இதனைத் தொடர்ந்து ஏப்ரல் 4, 5, 6 ஆகிய தேதிகளில் தென்னிந்திய திருமண முறைப்படி சென்னையில் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற உள்ளது.
திருமண தம்பதிகள் தங்களின் வாழ்க்கை பயணத்தை இணைந்து நடத்த அனைவரின் ஆசீர்வாதங்களையும், பிரார்த்தனைகளையும் அவர்களது பெற்றோர்கள் கோரியிருக்கிறார்கள். சினேகா லண்டனில் உள்ள வாரிக் கல்லூரியில் சட்டம் பயின்றுள்ளார். மேலும் தனது முதுகலை சட்ட பயிற்சியை லண்டனிலேயே படித்துள்ளார். இவரை திருமணம் செய்து கொள்ளப்போகும் அன்மோல் சர்மா இரட்டை எம்பிஏ படித்து அங்கு உள்ள பாங்க் ஆஃப் இங்கிலாந்தில் பணிபுரிந்து வருகிறார். இங்கிலாந்தில் இவர்களது குடும்பம் கடந்த 25 ஆண்டுகளாக தொழில் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.