திண்டுக்கல் மாவட்டம் பண்ணைக்காடு அருகே பதினொன்றாம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பண்ணைக்காடு அருகே உள்ள மச்சூரில் முனியாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அழகு செல்வி என்ற மகள் இருந்தார். இவர் பதினொன்றாம் வகுப்பு, கொடைக்கானலில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வந்தார். இந்நிலையில் இவர் வயிற்று வலியால் கடந்த சில மாதங்களாக அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக பல மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார்.
ஆனால் வயிற்றுவலி குணமாகவில்லை. இதனால் அவர் மன வேதனையில் இருந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத சூழ்நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து தாண்டிக்குடி காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.