நடிகர் சாந்தனு மற்றும் அவரது மனைவி கீர்த்தி இணைந்து நடித்துள்ள புதிய ஆல்பம் பாடலின் தலைப்பு வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் நடிகர் சாந்தனு பல திரைப்படங்களில் கதாநாயகனாகவும் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார். இவர் தற்போது விஜய் நடிப்பில் உருவாகியுள்ள’மாஸ்டர்’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் இவரது மனைவி கீர்த்தி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் தொகுப்பாளராக பணியாற்றியிருந்தார். சமீபத்தில் இவர்கள் இருவரும் இணைந்து நடித்த ‘கொஞ்சம் கொரோனா நிறைய காதல்’ என்ற குறும்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இதையடுத்து தற்போது சாந்தனுவும் கீர்த்தியும் இணைந்து புதிய பாடல் ஆல்பம் ஒன்றை உருவாக்கியுள்ளார்கள். இந்த ஆல்பத்திற்கு பிருந்தா மாஸ்டர் நடன இயக்கம் செய்துள்ளார். இசையமைப்பாளர் தரண் குமார் இசையமைத்துள்ளார். தற்போது இந்த ஆல்பத்தின் ‘எங்க போற டீ’ என்ற தலைப்புடன் வெளியாகிய போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.