Categories
உலக செய்திகள்

“எங்க மகனை எங்கே?”…. தாக்கி அழிக்கப்பட்ட மாஸ்க்வா கப்பல்…. ரஷ்ய மக்கள் வேதனை….!!!!

சில நாட்களுக்கு முன்பு கருங்கடலில் ரஷ்யாவின் அதிநவீன போர்க் கப்பலான மாஸ்க்வாவை ஏவுகணையால் தாக்கி அழித்ததாக உக்ரைன் அறிவித்தது. அதேசமயம் மாஸ்க்வாவில் தீ விபத்து ஏற்பட்டு வெடி மருந்துகள் வெடித்து சிதறியதாகவும், கப்பலை துறைமுகத்திற்கு கட்டியிழுத்து செல்லும் வழியில் சூறாவளியில் சிக்கி கப்பல் கடலில் மூழ்கியதாகவும், கப்பலில் பயணித்தவர்கள் அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாகவும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது. அதன்பிறகு போர்க்கப்பல் மூழ்கியதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக உக்ரைன் மீதான தாக்குதல்களை தீவிரப்படுத்துவோம் என்று ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்தது.

அந்த கப்பலில் 514 பேர் பயணித்ததாக கூறப்படுகிறது. ஆனால் ரஷ்யாவோ அந்த கப்பலில் இருந்த பணியாளர்கள் அனைவரும் உயிருடன் இருப்பதை போல போலி வீடியோக்களை காட்டி உலகை ஏமாற்ற முயற்சிக்கிறது. இந்த நிலையில் ரஷ்யாவை சேர்ந்த Egor என்ற இளைஞரின் தாய் lrina Shkrebets தனது மகன் மாஸ்க்வா கப்பலில் செஃப் ஆக பணியாற்றியதாகவும், கடலில் மூழ்கிய கப்பலில் இருந்து தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் தனது மகனை தேடிய போது அங்கு Egor இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் அந்த கப்பலில் கிட்டத்தட்ட 500க்கும் மேற்பட்டவர்கள் இருந்ததாகவும், ஆனால் தற்போது மருத்துவமனையில் 200 பேர் தான் உள்ளனர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையே lrina தனது மகன் எங்கே ? என்று கடற்படை தளபதி ஒருவரை கேட்ட போது, அவர் நான் எதையும் சொல்லமாட்டேன் என்று கூறியுள்ளார். அதேபோல் Egor-ன் தந்தை Dmitry கப்பலின் தளபதியை நேரில் சந்தித்து, “போர் வீரர்களாக நீங்களே உயிரோடு இருக்கிறீர்கள், ஆனால் பயிற்சி பெற்று வந்த என் மகன் மட்டும் ஏன் உயிரிழந்தான்” என்று கேட்டுள்ளார். அதோடு மட்டுமில்லாமல் தன்னை போல பிள்ளைகளை இழந்து நிற்பவர்கள் தைரியம் இருந்தால் இந்த தகவலை பரப்புங்கள் என்று Dmitry ரஷ்ய மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

Categories

Tech |