கர்நாடகாவில் மின் பற்றாக்குறை இல்லை. தேவையான நிலக்கரி இன்னும் ஒரு சில நாட்களில் கிடைக்கும் என அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.
கர்நாடகாவில் தேவையான அளவு நிலக்கரி இன்னும் ஒரு சில நாட்களில் கிடைக்கும் என அம்மாநில முதல்வர் கூறியுள்ளார். இதுதொடர்பாக நிருபர்களிடம் பேட்டியளித்த அவர் கூறியதாவது, நாடு முழுவதும் நிலக்கரி தட்டுப்பாடு இருப்பதாக பொய்யான தகவல்கள் பரவி வருகின்றன. கடந்த வாரம் கர்நாடகத்திற்கு தேவையான நிலக்கரி மத்திய அரசிடம் இருந்து வந்திருக்க வேண்டும். ஆனால் கிடைக்க வேண்டிய நிலக்கரி சரியாக வந்து சேரவில்லை என்பதை அவர் ஒப்புக் கொள்வதாக கூறினார்.
பின்னர் நிலக்கரி தட்டுப்பாடு ஏற்படுவதை தவிர்க்கும் விதமாக ஓரிரு நாட்களில் மத்திய அரசிடம் தேவையான நிலக்கரியை வாங்குவதாகவும் அவர் உறுதியளித்தார். இதுதொடர்பாக அதிகாரிகளிடம் தொடர்ந்து தகவல்களை கேட்டறிந்த அவர் மாநிலத்தில் எந்த அளவு நிலக்கரி இருக்கிறது. தற்போது அதன் பயன்பாடு எவ்வளவு என அனைத்து விதமான கேள்விகளையும் கேட்டு அறிந்தார்.