மணிமேகலை -உசேனின் கிராமத்து கல்யாணம் என்று யூட்யூபில் பகிர்ந்த வீடியோ வைரலாகி வருகின்றது.
மணிமேகலை முதன்முதலில் சன் மியூசிக் சேனலில் விஜேவாக தன் கெரியரை தொடங்கினார். இவர் தற்போது விஜய் டிவியில் பணி செய்து வருகிறார். மணிமேகலை விஜய் டிவியில் முக்கிய பிரபலமாக வலம் வருகிறார். மேலும் இவர் யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். அதில் தற்போது கிராமத்து கல்யாணம் என்று கேப்ஷன் இட்டு வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். மணிமேகலை மற்றும் இவரின் கணவர் உசேன் சீரியஸான வீடியோக்களை பதிவிடமாட்டார்கள். ஆனால் தற்போது சீரியஸான ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளனர். வீடியோவின் தொடக்கத்தில் எங்க கிராமத்து கேங்கில் முக்கியமான கல்யாணத்துக்கு போக முடியவில்லையே என்று டென்ஷனாகின்றார்.
எங்க கிராமத்து கேங்கின் முக்கியமான கல்யாணத்தில் இல்லாமல் போய்விட்டதே என்று காமெடியான முகத்தோடு சீரியசாக பேசுகின்றார் மணிமேகலை. இத்திருமணத்தின் போது மணிமேகலைக்கு குக் வித்து கோமாளி ஷூட்டிங் இருப்பதால் அங்கு செல்ல முடியவில்லை. ஷூட்டிங் இருக்கும்போதா திருமணம் வைக்க வேண்டும் என்று புலம்புகிறார். ஒருவழியாக வீடியோகால் மூலம் வாழ்த்து தெரிவித்து விட்டோம் என்று உசேனும் மணிமேகலையும் மாறி மாறி பேசுகின்றனர். திருமண தொடர்பான வீடியோ முடிவடைந்த பிறகு திருமண வாழ்த்து கூறுவதற்கு பதிலாக மணிமேகலை ஒன்ஸ் அகைன் ஹாப்பி பர்த்டே என்று கூற அதற்கு உசேன் கிண்டல் செய்து சிரிக்கின்றார். இதன்பிறகு இருவரும் அந்த திருமண ஜோடிகளுக்கு வாழ்த்துக்களை கூறுகின்றனர்.